வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஏதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் சிவனொளி பாதமலையின் பிரமதம குருவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் பீடாதிபதியும் பெல்மதுளை ரஜமஹா விகாரையின் தலைவருமான வணக்கத்திற்குரிய பெங்கமுவ தம்மதின நாஹிமி தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிவனொளிபாதமலை பருவ காலத்தில் வழங்கப்பட உள்ள சேவைகள் மற்றும் பெரஹெர ஊர்வலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சினொளிபாதமலை பருவ காலத்தில் இலங்கை மின்சார சபை, நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, சப்ரகமுவ மாகாண வீதி அவிவிருத்தி அமைச்சு, மாகாண சுகாதரா அமைச்சு, இலங்கை போக்குவரத்துச் சபை, உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மத குருமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாவட்ட செயலார் மாலணி லொக்குபோத்தாகம, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள்பாதுகாப்பு பிரிவினர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் –