பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணியை பல்கலைகழகங்களின் நிர்வாக சபைகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள சட்டத்தின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் போது, ஆளும் சபை நேர்காணல் நடத்தி, மூன்று முன்மொழியப்பட்ட பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் அரச தலைவருக்கு அனுப்பப்படும். அவர்களில் ஒருவர் அரசு தலைவரின் விருப்பப்படி துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்.
இந்த நியமன முறை நடைமுறைப்படுத்தப்பட்டபோது நேர்காணலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்று கடந்த கால தகவல்கள் தெரிவிக்கின்றன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.