22 ஆவது திருத்தத்துக்கு முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் ஆதரவாக இருந்துள்ளதாக சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
22 ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுக்காமல் இருந்த கோட்டாவின் குரல் பொதுஜன பெரமுனவில் உள்ள முக்கிய தலைவர் ஒருவர் மூலம் வெளிவந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல மகிந்தானந்த அளுத்கமகே.
கோட்டாவின் யோசனைகளை பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் மகிந்தானந்த எடுத்து கூறினார். 22 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடான கலந்துரையாடலின் போது மகிந்தானந்தவும் 22-க்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார். அதன் பிரகாரம் கோட்டா, நாமல், சசீந்திர ஆகியோர் 22 ஆவது திருத்தத்தினை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.