புதிய வரிகள் மூலமாக சமூக ஊடகங்களை முடக்குவதற்கு சதி; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

0
181

‘சமீபத்தில் அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கின்றது.அவ்வாறு விதிக்கப்பட்ட வரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும். அதன் பிரகாரம் தொலைபேசிகள் சார்ந்தும் மிகப்பெரிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களை முடக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாகும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விளைச்சல் பாதிப்புக்கு இதுவரை இழப்பீடு வழங்காத அரசாங்கம், மக்களை விவசாயம் செய்யச்சொல்கிறார்கள் எனவும், இரண்டு வருடங்களாக காபனிக் உரம் எனக் கூறிக் கொண்டு புராணம் சொல்லிவிவசாயத்தை அழித்தவர்களே இப்போது விவசாயம் செய்யச் சொல்வது கேலிக்கூத்தானது எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மாளிகைக்கும், பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்களுக்கான வீடுகளுக்கும் எந்த விததட்டுப்பாடுகளும் நிலவுவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் மக்களுக்கு அந்த விடயம்சார்ந்து பிரச்சினைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பிற்காக ஐக்கிய மக்கள் சக்தி விவசாய புரட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர்,அதன் தொடக்க அங்குணார்பன நிகழ்வை நாளை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு வருட ராஜபக்ஸ சாபத்தின் அவல நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றுகர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான ஊட்டச் சத்து சார்ந்த பிரச்சினைஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற களுத்துறை மாவட்ட சமூக ஊடகசெயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here