நடத்துனர் இன்றி இயங்கவுள்ள அதிநவீன பஸ் சேவை

0
306

இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் படவுள்ளது. கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்ப டுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

கொழும்பு கோட்டை,  கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை,  நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்ஸில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால்இ இந்த பஸ்களுக்கு நடத்துனர் தேவையில்லை என்பது மற்றொரு விசேட அம்சமாக குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here