நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தப்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர்.