டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் : கௌரவிப்பும் -வீடியோ இணைப்பு

0
796

ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர் வீ. லக்ஸ்மி பிரபா, ஹட்டன் வலயக் கல்விப்பணி மனையின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுமதி, கோட்டம் இரண்டிற்கு பொறுப்பான கோட்டக் கல்விப்பணிப்பாளர் செந்துரவேல், கிராம உத்தியோகத்தர் ரமேஸ்கண்ணா, அயல் பாடசாலையின் அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதம அதிதிகள் பேன்ட் வாத்தியக் கருவிகளோடு பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதோடு அட்டன் வலயக்கல்விப் பணிமனையின் உதவி கல்விப்பணிப்பாளர்கள், மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் சேவையில் 30 வருடகால சேவையினை கொண்ட ஆசிரியர்களான கதிர்காமன், லோரன்ஸ், ஞானமலர், ஆகியோர் பொன்னாடை போற்றி நினைவு பரிசில்கள் வழங்கி வைத்து பாடசாலை நிர்வாகத்தினரினால் கௌரவிக்கப்பட்டனர் .

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள், 2021 ஆம் ஆண்டு உயர் தரத்தில் சித்தி எய்தி பல்கலைக் கழத்திற்கு தெரிவான மாணவர்களையும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமைக் குறிப்பிடதக்கது.

எஸ்.சதீஸ்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here