Breaking news- மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகிறார் டிரம்ப்

0
247

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகிறார் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எனது நன்றி என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தனது வெற்றி உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உரையாற்றி வரும் டொனால்ட் டிரம்ப் தனது உரையின்போது, மக்கள் என்னை நம்பித்தான் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்று கூறியிருக்கிறார்.

 

வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சிப்பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் டிரம்ப். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here