இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படா வுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,790 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,522 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 712 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.