சீரற்ற காலநிலையினால் , தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகள் (2024) இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து மூன்று தினங்களுக்கு A/L பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 27, 28 மற்றும் 29ம் திகதிகளில் A/L பரீட்சை நடைபெறாது.
இந்த மூன்று தினங்களுக்குமான பரீட்சைகள் A/L பரீட்சை முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள டிசம்பர் மாதம் 20ம் திகதிக்கு பின்னர் நடாத்தப்படும்.
டிசம்பர் 21, 22 மற்றும் 23ம் திகதிகளில் இந்த பரீட்சைகள் நடாத்தப்படும் என பரிட்சைகள் நிலையம் தெரிவித்துள்ளது