2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், வெளிவரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் கடந்த மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் 3,844 மத்திய நிலையங்களில் நடைபெற்றதுடன் இந்த பரீட்சைகளுக்காக 517,486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 407,127 பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 590 பரீட்சார்த்திகள் விசேட தேவையுடைவர்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.