இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இதன் பிரகாரம், இன்றைய கூட்டத்தில், “அரிய நேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை” என்றும், “தமது கட்சியைச் சேர்ந்த அரிய நேந்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக, அதிலிருந்து விலக வேண்டும் என்றும் தீர்மானித்ததோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் உள்ளிட்ட மூன்று தீர்மானங்களையும் இன்று (01) நிறைவேற்றியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )