உடன் அழுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் உடன் அழுலுக்கு வரும் வகையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,ஆர்ப்பாட்டக்காரர்களால் ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டு தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அதன் நீட்சி பாராளுமன்றத்தை நொக்கி நகர்ந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாதுகாப்புத்தரப்புக்குமிடையியே சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைப்பதற்காக முன்னோக்கி நகர்ந்த வேளையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் இநடத்தப்பட்டது. இதன்போது குருணாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும் உயிரிழந்துள்ளார்.
பாராளுமன்றத்தை நோக்கி செல்வதைத் தவிர்க்குமாறு பலதரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும் அதனை கண்டுக்கொள்ளாத நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்நகர்ந்தார்கள். இந்நிலையில் மோதல்களும் கோசங்களும் எழுந்துள்ளது.
இதனையடுத்து இந்த அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.