இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 700 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுளளதுடன் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்தோனேஷியாவில் நாட்டிற்குள் ஏற்பட்டுள்ளமையினால், அதனூடாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.