Easter Attack – ஷானி அபேசேகரவின் அதிரடி தகவல் வெளியானது

0
343

“உயிா்த்த ஞாயிறு தாக்குதல் ஏப்ரல் 21 ஆம் திகதி தனித்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இதில் சதித்திட்டத்துடன் கூடிய முன்னரான சம்பவங்களுடன் தொடர்புடைய திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, “தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு ஏற்பவே இது நடந்தது என உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் ஊடாகவே தெரிய வருகிறது” என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றாா்.

“விசாரணை நடத்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சதி எவ்வாறு நடந்துள்ளது என்பது தொடர்பில் தகவல் வந்துள்ளது. எனினும் அந்த விடயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவது குறித்து தொடர்ந்து விசாரணைகளை நடத்த வேண்டியுள்ளது” என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.

பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய “உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் தீர்க்கப்படாத மர்மங்களும்” என்ற புலனாய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சட்ட வல்லுனர்கள், சிவில் மற்றும்

அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு கொழும்பில் 25 அன்று  நடைபெற்றது.

தொடா்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர,

“ஹர்ஷித் மௌலானா என்பவர் தொடர்பில் தகவல் வெளியானது. அவரது கருத்துக்கள் தொடர்பில் ஆழமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அது தொடர்பில் இன்னும் விசாரணையில் ஆரம்பிக்கப்படவில்லை என நான் நினக்கின்றேன். அதில் உள்ள முக்கிய விடயம் தொடர்பாக நான் கூறுகின்றேன். அதனுடன் தொடர்பற்ற ஒருவர் தொடர்பில் அவர் கூறுகின்றார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் எமது ஒருவர் இருக்கின்றார். அவரை வெளியில் எடுக்குமாறு கூறியுள்ளார். நான் மட்டக்களப்பில் இருக்கின்றேன். என்னால் அதனை செய்ய முடியாது என அவருக்கு கூறியுள்ளனர். தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிக்கச் சென்ற ஜமீல் என்பவர் தொலைபேசியில் உரையாடுவதை காண முடிகிறது.

அதனை சி.சி.டி.வியில் காண முடிகிறது. அந்த அழைப்பு வந்து சில செக்கன்களில் பையை எடுத்துக் கொண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறினார். அதன் பின்னரே தெஹிவளையில் உள்ள விடுதிக்கு அவா் செல்கின்றார். அங்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்து அங்கு தனது பையை விட்டுவிட்டு அருகிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றார்.

இதன் போது ஏற்படுகின்ற சந்தேகத்தின் பின்னரே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்ற போதே இவர் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் குறித்த அந்த நபருடன் விசாரணை மேற்கொண்டபோதுதான் மனைவியுடன், ஏற்பட்ட சர்ச்சை காரணமாக வந்ததாக ஜமீல் கூறினார். வேண்டுமென்றால் மனைவியின் தொலைபேசி இலக்கத்தை தருகிறேன் அவரிடம் கேளுங்கள் எனக் கூறியுள்ளார். அவரின் மனைவியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வாய்த் தர்க்கம் ஏற்பட்டு வெளியேறினார் எங்கு சென்றார் என தெரியவில்லை என்று பதிலளித்தாா்.

புலனாய்வுப்பிரிவினரும் அவர் வீட்டிலிருப்பதாக எண்ணி தேடுகின்றார்கள். ஒமார் கர்த்தா என்பது அவரது மனைவியின் பெயர். ஒமார் கர்த்ததாவின் தொலைபேசிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அழைப்பெடுத்தனர். விபரங்களைக் கேட்டறிந்தனர்.

பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வெளியேறினார். அதன் பின்னர் சுமார் பத்து நிமிடங்களின் பின்னர் ஜமீலின் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றார். அவரை அங்கே வைத்துக்கொள்ளுங்கள் நான் வருகிறேன் என கூறியுள்ளார்.

வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தவர்கள் இருவர் படுகலை செய்யப்பட்ட இடத்திற்கு விசாரணைகளை நடத்துவதற்கு நான் ஒரு குழுவினரை அனுப்பினேன். நீண்ட விசாரணைகள் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி அரச புலனாய்வுப்பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார். இந்த கொலைக்காக பயன் படுத்தப்பட்ட ஜெக்கட் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். குற்றச்செயல் இடம்பெற்ற இடத்தை தவிர்த்து வேறு ஒரு இடத்தில் அதனை செய்துள்ளார்.

வவுனதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்த அஜந்தன் என்பவரின் வீட்டுக்கே மோப்ப நாய் சென்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற நாள் நவம்பா் மாதம் 30ஆம் திகதி. டிசம்பர் மாதம் 3ஆம் திகதியாகும் போது 72 மணித்தியாலங் கள் கடந்துள்ளன. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி கபூர் மாமா கைது செய்யப்பட்டதையடுத்து சஹ்ரான் தலைமையிலான தௌகீத்ஜமாத் அமைப்பே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற விடயம் தெரிய வந்தது. ஏன் புலனாய்வுப் பிரினிர் இவ்வாறான தகவல்களை வழங்கி ஏன் விசாணைகளை திசை திருப்பினர் என்பது பாரிய பிரச்சினையாகும்.

இது தொடரடர்பில் தேடும் போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதி தான் ஜனாதிபதியாக சத்தியபிரமாணம் செய்தார். அப்போது நான். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும் இருந்தேன். எவ்வித காரணம் இல்லாமல் நான் இடமாற்றம் செய்யப்பட்டேன்” என்று முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேலும் தெரிவித்தாா்.

காணொளிக்கான தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது

https://www.facebook.com/share/v/qANqr277VTVUWKjh/https://www.facebook.com/share/v/EADha6DjWVMsYPkc/?mibextid=oFDknk

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here