காலி முத்திடல் போராட்டத்தை ‘GO HOME GOTA ‘ முன்னெடுத்த மூன்று முக்கிய நபர்களின் வங்கிக் கணக்கிற்கு வெளிநாடொன்றிலிருந்து 45 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மூன்று பிதானமானவர்களுக்கு உள்ளுர் வங்கிகளில் அதிகளவு பணம் வைபப்பிலிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமையவே குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையின் போதே தெரிய வந்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ரட்டா, திலான் சேனாநாயக்க , அவிஷ்க விராஜ் கோனார என அழைக்கப்படும் இரத்திது சேனாரத்ன ஆகிய மூன்று பிரதான செயற்பாட்டாளர்களும் கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ. இந்த மூன்று கணக்குகளிலும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வைப்பிலிடப்பட்ட முழுத் தொகையையும் திரும்பப் பெற்றதாகவும், பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.