அட்டன் REHOBOTH பாலர் பாடசாலையின் 10வது வருட பூர்த்தி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

0
150

2014 ஆம் ஆண்டு செல்வி. அமிர்நலிங்கம் ரேணுகா தேவி தலைமையில் REHOBOTH பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் எழுத்து பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது உடல் , உள,சமூக செயற்பாடுகளுக்கும், நிகழ்ச்சிகளுக்குமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

பிள்ளைகளுக்கான திறன் சார் விருத்தி கற்பித்தல் முறைகளும் பின்பற்றப்படுகின்றது. இப்பாடசாலையில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி மும்மொழி கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாகவும்,நாட்டிற்கு நல்ல பிரஜையாகவும் இருக்க வேண்டும் என்பதே இப்பாடசாலையின் நோக்கமாக உள்ளது.

இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பாலர் பாடசாலை சார் கற்கைநெறிகளை பூர்த்தி பல வருட அனுபவங்களை பெற்றவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வருடமும் பாடசாலையில் பொங்கல் விழா,தமிழ் சிங்கள புதுவருட சம்பிரதாய நிகழ்வுகள், சர்வதேசவிசேட தினங்கள், விளையாட்டுப் போட்டிகள், சந்தை, டெங்கு ஒழிப்பு செயற்பாடு,போசனை உணவு திட்டம் சிறுவர்தினம், முதியவர்களை மதித்தல், கண்காட்சிகள், பொது இடங்களுக்கு செல்லல், சமய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லல் போன்ற பல செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

அவ்வாறே இவ்வருடமும் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 10வது வருட பூர்த்தி நிகழ்வும் 06/12/2024 அன்று மிக விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டி.கெ.குணதிலக்க (பணிப்பாளர், மாகாண முன்பள்ளி ப் பருவ அபிவிருத்தி பிரிவு, மத்திய மாகாணம்) அவர்களும் , விசேட விருந்தினராக ஸ்ரீதரன் (முன்னால் வலய பணிப்பாளர்,ஹட்டன் வலயம்) ) அவர்களும், மெதடிஸ்தகுருவானவர்களும், அரசாங்க பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஏனைய அரச உத்தியோகத்தர்களும், பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் கலந்துக்கொண்டார்கள்.

விசேட நிகழ்வுகளாக, கழிவுப் பொருட்கள் குறித்த குழந்தைகளின் மும்மொழி விளக்கங்கள் மற்றும் அவர்களின் பல திறமைகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. மேலும் பல வித்தியாசமான கலை நிகழ்வுகள் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தின.

நமது சமுதாயத்தில் முன்னிலையில் இருக்கும் பாலர் பாடசாலைகளில் REHOBOTH பாடசாலையும் ஒன்று என கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இணைய விரும்பினால் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்

0778000514 / 0512222410

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here