அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10.10 மணியளவில் அட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் அட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளகியுள்ளது.
பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுதுள்ளது.
பஸ்ஸின் சாரதி நடத்துனர் உட்பட பயணிகள் பலர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியருகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.