WhatsApp நிறுவனம் ‘Delete For Everyone’ என்ற வசதியை கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் WhatsApp செய்தியை நீக்கியதும், அந்த செய்தி, அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவரின் Chat இல் இருந்தும் நீக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில், இந்த வசதியில் புதிய Update ஒன்றை WhatsApp நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அதாவது, இதுவரை Delete For Everyone மூலம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அனுப்பிய செய்திகளை மாத்திரமே நீக்க முடிந்தது. இனிமேல் இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை Delete For Everyone வசதி மூலம் செய்திகளை நீக்கும் வசதியை WhatsApp நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
இந்த வசதியை Android மற்றும் iOS இரண்டிலும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.