அகில இலங்கை ரீதியில் முதலிடம் ; வெற்றியின் ரகசியம் பற்றி என்ன கூறுகிறார் – வீடியோ இணைப்பு

0
289

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை முடிவுகள்  வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் வைத்தியர்களான திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகனானகவும்,  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

இவரை பாராட்டும் முகமாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் புள்ளநாயகம் நகுலேஸ்வரி ,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சு. குலேந்திரகுமார்  மற்றும்  மட் புனித மிக்கேல் கல்லூரி அதிபர்  பயஸ் ஆனந்தராஜா  ஆசிரியர்கள் மாணவனின் வீட்டிற்கு விஜயம் மேற்கொண்டு சாதனை புரிந்த மாணவனையும் அவருக்கு உறுதுணையாகவிருந்த மாணவனின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here