குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டப் பிரிவைச் சேர்ந்த பெரிய நாகவத்தை தோட்டத்தில் தேயிலை செடிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த குளவிகளே இன்று பகல் 12.30 மணியளவில், கலைந்து கொட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.