நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடு வைத்திய சாலைகளில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவியது. இதனால் நோயாளர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தனர்.

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழ்கின்ற அக்கரபத்தனை பிரதேசத்தில் அக்கரபத்தனை_மன்றாசி வைத்தியசாலைக்கு தேவையான மேலும் ஒரு தொகை மருந்து பொருட்கள்  வைத்திய அதிகாரி பிரதீபா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி மருந்து பொருட்களை கனடாவில் இயங்கக்கூடிய இரும்பொறை அறக்கட்டளையினர் வழங்கி வைத்தனர்.அதற்கான முயற்சிகளை சமூகசெயற்பாட்டாளர்
ரெங்கசாமி அருட்செல்வம் அவர்கள் மேற்கொண்டு இருந்தார்

இந்த நிகழ்வில் அக்கரபத்தனை காவல் துறையை சேர்ந்த துளசிகுமார்
சமூகசெயற்பாட்டாளர் ஜெகநாதன் நிதர்சன், ஊடகவியலாளர் கவியுகன்
அதிபர் பாலகிருஸ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த இந்த மருந்து பொருட்களில் ஏற்கனவே ஒரு தொகை கடந்த மாதம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் – அருட் செல்வம்