அக்கரப்பத்தனையில் இரு பெண்களை காணவில்லை

0
250

அக்கரபத்தனையில், விரகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 05 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் கருந்து விறகு சேர்க்க சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 05 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதான யுவதிகளே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு யுவதிகளும் தோட்டத்தில் தொழில் செய்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸார் தொடர்ச்சியாக இவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here