நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தொடர் இம்மாதம் 26ம் திகதி நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தலைவராக இருந்த கதிர்செல்வன் தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொணௌடமானிடம் கடிதமொன்றை அன்மையில் கையளித்ருந்த நிலையிலேயே , எதிர்வரும் 26 ஆம் திகதி தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தொடர் அக்கரப்பத்தனை பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறும் எனமத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் யூ.பி.ஹெரத் அவர்களினால் வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது