இலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் மகாராணிக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதோடு, இன்றையதினம் இடம்பெறவுள்ள இறுதிக் கிரியைகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் .

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் ஜனாதிபதி நாளைமறுதினம் புதன்கிழமை அதிகாலை நாடு திரும்பவுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரிட்டன் சென்றுள்ளார்.

17 ஆம் திகதி அதிகாலை 3.15மணியளவில் ஜனாதிபதி பிரிட்டனுக்கு புறப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.