அட்டனிலிருந்து  பொகவந்தலாவை சென்றுக்கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகிய சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அட்டனிலிருந்து சென்றுக் கொண்டிருந்த அம்பியூலன்ஸ் அளுத்கலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த   இரு ஆட்டோக்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதுடன், அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை பிறிதொரு ஆட்டோவில் மோதிச்சென்றே   அருகில் உள்ள வீட்டு வாயிலிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வீட்டுப் பகுதி சேதமடைந்து உள்ளதுடன் குறித்த மூன்று ஆட்டோக்களும் சேதமடைந்துள்ளது.

சாரதி மது போதையில் இருந்ததமையினாலேயே இவ்விபத்துஇடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை அருகில் உள்ள மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.கிருஸ்ணா