அட்டன் நகரசபைக்கு உட்பட்ட காமினி புர பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காமினி புர பகுதி வீடொன்றின் மீது கடதாசி பூ மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்ததில் வீட்டிலிருந்த கணவன்-மனைவி இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடும் காற்றுடன் கூடிய கடும் மழையினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

எம்.கிருஸ்ணா