அட்டன் – கொழும்பு வீதியில் விபத்து இருவர் வைத்தியசாலையில்

0
280

எஸ் .சதீஸ் .

அட்டன் –  கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் விபத்து
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகலபகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி கினிகத்தேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் இந்த சம்பவம் இன்று.செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுக்கு கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இதேவேளை பஸ்ஸுக்கும்  வேனுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு  குறித்த விபத்து காரணம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here