அட்டன் – கண்டி வீதியில் திடீரென தீபற்றிய ஆட்டோ – வீடியோ இணைப்பு

0
696

அட்டன் – கண்டி  வீதியில் கெலி ஓயா பகுதிக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பற்றி எரிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி கம்பளை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதெனிய கெலிஓயா பகுதியிலே இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேராதெனிய பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தீ பற்றியது.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   உயிராபத்துக்கள் இல்லாத போதும் முச்சக்கரவண்டி முற்றாக சேதமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here