அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் ரயில் வீதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில்  மஸ்கெலியா, பகுதியைச் சேர்ந்த சிவனு கண்ணியப்பன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி  11.50 மணிக்குச் சென்ற ரயிலிலேயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

 

எம்.கிருஸ்ணா