அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.

16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.