அனர்த்த நிலைமையை அறிவிக்க 117ஐ அழைக்கவும்

0
175

அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்காக 117 என்ற துரித தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்படுத்தப்படவுள்ளது.

அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு அறிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here