சீமெந்து விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் வேலையிழந்துள்ளதால், அவர்கள் பயிர்ச்செய்கையின் பக்கம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பலருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நிர்மாணத்துறை தற்போது மந்தநிலையில் உள்ளதாகவும், கட்டுமானம் தொடர்பான பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.