அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

0
270

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதியினால்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதால் அந்நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பது தொடர்பான ஆவணங்களை பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.parlaiment.lk) பதிவேற்றம் செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here