அன்று சிங்களம் மட்டும். இன்று ஆங்கிலம் மட்டுமா? – மனோ கேள்வி

0
167

1956 சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததை போன்று, இன்று ஆங்கிலம் மட்டும் சட்டம் கொண்டு வருகிறீர்களா? அதென்ன எதையெடுத்தாலும் “மட்டும்” என்கிறீர்கள்? என இன்று பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி.

சட்டக்கல்லூரி பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்படுவது என்ற புதிய விதி பற்றிய சர்ச்சை பாராளுமன்றத்தில் எழுந்த போது அதில் தலையிட்டு மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இலங்கையில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மற்றும் ஆட்சி மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

இந்த மூன்றில் விரும்பிய ஒரு மொழியில் பரீட்சை எழுத சட்டக்கல்லூரி மாணவர் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம் அவசியந்தான். ஆனால் ஆங்கிலம் மட்டும் என்றால் அது கொழும்பில் உள்ள ஒரு வகுப்புக்கு மட்டுமே  உதவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here