அமெரிக்க குடியுரிமையை பெற நீங்களும் விண்ணப்பிக்கலாம்

0
275

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க குடியுரிமை வீசா திட்டத்திற்கு (Green Card)  நேற்று  (05) முதல் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கிறீன் கார்ட்’ என அழைக்கப்படும் வருடாந்த அமெரிக்க Diversity Visa Program (பன்முகத்தன்மை வீசா திட்டம்) திட்டத்திற்கு அமைய, 2024ஆம் ஆண்டிற்கான விண்ணப்பம் கோரல் இலங்கை நேரப்படி  நேற்று இரவு 9.30 முதல் ஆரம்பமானது.

அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 10:30 மணி வரை இவ்விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

http://dvprogram.state.gov எனும் இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இந்த பன்முகத்தன்மை வீசா திட்டத்தின் மூலம், வெவ்வேறு நாடுகளிலுள்ள வருடாந்தம் சுமார் 50,000 இற்கும் மேற்பட்ட நபர்களை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான விண்ணப்ப செயன்முறைகள் அனைத்தும் இலத்திரனியல் முறை மூலம் ஒன்லைனில் மாத்திரம் உள்ளதோடு, காகித பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here