அமெரிக்க விவசாயத் திணைக்களத்தினால் சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு உதவி

0
270

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

அமெரிக்கா நாட்டின் விவசாயத் திணைக்களம் மற்றும் Save the Children அமைப்பும் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமைகளை கட்டியெழுப்புவதற்கும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள குழந்தைகளிடையே கல்வி அறிவை மேம் படுத்துவத்துவதை மையமாக கொண்டு மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேற்படி அமைப்பினால் Promoting Autonomy for Literacy and Alternativeness through Market Alliance Programmed Project (PALAMA) என்ற திட்டம்  2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் செயல்பட்டு வருவதுடன், இதற்கு இலங்கையில் சுகாதாரம், நிதி மற்றும் கல்வி ஆகிய அமைச்சுகளின் பங்களிப்புகளும் கிடைத்து வருவதுடன், இத்திட்டமானது இலங்கை நாட்டில் இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கிளிநொச்சு, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய ஏழு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களிலும் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை ஆரம்ப கல்வி கற்கும் 856 பாடசாலைகளை சேர்ந்த 108,273 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மை அடைவதோடு, பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் கல்வி அறிவு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தல், பாடசாலையில் வழங்கும் உணவை ஊக்கவித்தல், உணவை பாதுகாத்தல் மற்றும் சிறந்த சுகாதார, ஊட்டச்சத்து குறித்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல், பாடசாலைகளில் சமையல் அறைகளை மற்றும் மலசலகூடங்களை அமைத்தல் என்பனவும் இத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள.

மேற்படி திட்டத்தின் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, பலாங்கொடை, எம்பிலிபிட்டிய, நிவித்திகல ஆகிய பிரதேசங்களில் உள்ள 147 பாடசாலைகளை சேர்ந்த 12,463 மாணவர்கள் பயனடைகின்றனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினக்கல் தொழில்துறையினர்களின் பிள்ளைகள் மற்றும் பெருந்தோட்ட சமூகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வி வள்ர்ச்சியை பெற்று கொடுகப்பது குறித்து சப்ரகமுவ மாகாண சபை பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த பிரதேசமாக காணப்படும் பலாங்கொடை நன்பேரியில் நெங்ரெக் தோட்டத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலையில் 64 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்க்கின்றனர். இம்மாணவர்களின் நலன் கருதி சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மேற்படி பாடசாலை வளாகத்தில் மாணவர் விடுத்தி உட்பட அனைத்து வசதிகளும் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபை வளாகங்கள், மாகாண வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிறந்த ஆற்றலை மேம்படுத்துவத்துவதற்கு சப்ரகமுவ மாகாண சபை மிகவும் அக்கறையுடன் செயல்பட்ட வருகின்றது.

உணவு பாதுகாப்பை மையமாக கொண்டு சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 600 ஏக்கர் காணியிலும் மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணியிலும் பயிர் செய்கை நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பிரதிநிதி,

மேற்படி திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மாகாணத்தில் வசிக்கும் விவசாயிகளின் மரக்கறி மற்றும் தானிய வகைகளை விலைக்கு வாங்கி பிள்ளைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதாவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் Senior International Program Specialist Alberghin Panl, Program Analyst Collin Bradly, Agri Specialist Thilani Kankanmge (USDA Team), Chief of Party PLAM/A Project Micah Olad, Deputy Chief of Party PLAM/A Project Rashika Dias, Save the Children Field Manager Nalinda Karunarathna, Education Manager Thaindu Samarathunga, Commodity Coordinator Wimal Jayathilaka, Senior Community Manager Sampath Prasantha மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத், மாகாண ஆளுநரின் செயலாளர் எச்.டி.சிசிர, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க, மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here