புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்ற நிலையில் கடந்த மாதம் 23ஆம்திகதி அவர் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவையில் மொத்தமாக 23 பேர் உள்ள நிலையில், அவர்களில் 10 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும் கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர் என்பதாகவும் தெரிய வருகிறது.