அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து தலவாக்கலையில் போராட்டம்.

0
263

காலி முகத்திடலில் 100 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பாவி மக்கள் மீது இலங்கை ஜனாதிபதி தனது வன்மத்தை வெளிப்படுத்தியதற்கும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்க்கும் கண்டனம் தெரிவித்து தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் நேற்று கண்டன போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை பிடி தளராதே அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் அங்குள்ள இளைஞர்களும் இணைந்துக்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

“காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்த போதும் கோட்டாபய ராஜபக்ச கையிலெடுக்காத தாக்குதலை பதவி பிரமாணம் செய்து 12 மணிநேரத்திற்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையிலெடுத்து ஆர்ப்பாட்டகாரர்களையும் அங்குள்ள ஊடகவியலாளர்களையும் தாக்கியது ஜனநாயகத்திற்கு பொருத்தமில்லாத ஒரு செயல்பாடு என்றும் ராஜபக்ச அரசின் கைக்கூலியாக செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உண்மை சுயரூபம் வெளிபடுவதாகவும் தலவாக்கையில் கூடிய போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறான அடக்குமுறைக்கு எதிராக சர்வதேசத்தின் கவனம் திரும்ப வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தனர். காலை 11.00 மணியளவில் கடும் மழைக்கு மத்தியிலும் இப்போராட்டம் நடைபெற்றிருந்தது. கூடிய விரைவில் ஜனாதிபதி ரணில் வீடுசெல்லா விட்டால் நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

-ஆர்.கே-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here