அரசாங்க ஊழியர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் வீட்டிலிருந்தே தமது பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இனிமேல் நான்கு நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் பின்னர் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.