இலங்கை கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் , குத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து நடாத்தும் அரச சாகித்ய விருது விழா இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை இலக்கியத்துறைக்கு தமது உன்னத படைப்புகளால் ஊட்டமளித்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றது. அரசின் அதியுயர் விருதான சாஹித்ய ரத்னா விருதும் வழங்கப்படவுள்ளது. சிறப்பு மலர் வெளியீடு மற்றும் கலைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெறும்.