அரியணை ஏறுகிறார் இளவரசர் சார்ல்ஸ்

0
237

மகாராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்ள்ஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்ள்ஸ் உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

73 வயதான சார்ள்ஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து டயானா 1997-ல் வீதி விபத்தில் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்ள்ஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய அரசராக சார்ள்ஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here