இலங்கையில் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. செப்ரெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், இம்மாதம் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தின மாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல் – சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபக மறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூறியுள்ளது.