அவசர காலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிரேர ணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் என்றவாறு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்பது பேர் கொண்ட சுயாதீன குழு ஆகியன பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன.

இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, அவசரகால நிலை நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டால், 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தினுடைய அங்கீகாரத்தை பெற வேண்டும்.

பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 17ஆம் தேதி அவசர கால நிலை பிரகடன படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.