ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் 20 பேர்

0
262

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை       ஆரம்பமாகவுள்ளதோடு, முதலாவது போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை அன்றையதினம் எதிர் கொள்வதைத் தொடர்ந்து குழு நிலை போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

தசுன் ஷானக – தலைவர், தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் – விக்கெட் காப்பாளர்/ துடுப்பாட்ட வீரர், சரித் அசலங்க – உப தலைவர், பானுக ராஜபக்ஷ – விக்கெட் காப்பாளர்/ துடுப்பாட்ட வீரர், அஷேன் பண்டார, தனஞ்சய டி சில்வா, வணிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷண, ஜெஃப்ரி வந்தர்சே, பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன தில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண, நுவனிது பெனாண்டோ, துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமால் – விக்கெட் காப்பாளர்/ துடுப்பாட்ட வீரர், அசித்த பெனாண்டோ – பினுர பெர்னாண்டோவின் இடத்திற்கு பிரமோத் மதுஷான் – கசுன் ராஜிதவின் இடத்திற்கு ஆகியோர் பங்கு பெறவுள்ளனர். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here