ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

0
308

ஆசிய விளையாட்டு விழா அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 19ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது.

எனினும், சீனாவில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஆசிய விளையாட்டு விழா நடைபெறவிருந்த ஹாங்சோ நகரத்தில் பல மாதங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாகவும் ஆசிய விளையாட்டு விழாவை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவும், ஆசிய ஒலிம்பிக் குழுவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழா 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here