மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு காட்டப்பட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் அட்டனில் எடுக்கப்பட்டது. முறையான வடிகாலமைப்பு இல்லாதமையினால் மழைக்காலங்களில் குறிப்பாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பாதைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் ஆபத்தான நிலைமையையும் தோற்றுவிக்கின்றது. இ.தொ.க வின் ஆதரவாளர்  அட்டன் நகரசபைத்தலைவராக இருக்கின்றநிலையில் இதுபற்றி பலதடவை முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். முறையான வடிகாலமைப்பு இல்லாமையினால் எவ்வாறான ஆபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடுமோ என இப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாளாந்தம் வந்துபோகும் குறித்த பகுதியின் அபிவிருத்தி விடயத்தில் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுப்பாரா என்று கேட்காதவர்களும் இல்லை. குறித்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் அவதானம் செலுத்துவார்களா?