சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளதுடன் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.