ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து கொண்டார் என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகமவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த  அதிகாரி  இன்று அதிகாலை காலிமுகதிடல் போராட்டப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிகாரி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிள் ஆவார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது