நோர்வூட் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஆறு நாட்களுக்கு பின்  இன்று (08.06.2022.) காலை பத்து மணியளவில் மண்ணெண்ணை கொண்டு வரப்பட்டதை அடுத்து நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு மக்கள் படையெடுத்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்  நோர்வூட் பிரதேச பொது மக்கள் மண்ணெண்ணை கோரி பாரிய ஆர்பாட்டமென்றை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் நோர்வூட் எரிபொருள் நிரப்ப 6400 லீற்றர் மண்ணெண்ணை பவுசர் ஊடாக கொண்டு வரப்பட்டதை அடுத்து ஒரு நபருக்கு 300 ருபாய்க்கு மாத்திரம் வழங்கப்பட்டது.

2000 மேற்பட்ட பயனாளிகள் நீண்ட வரிசையில் நின்றனர்.

தகவல்முத்து